காத்தான்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபரும் சமூக சேவையாளரும் இலக்கிய வாதியுமான ஏ.எல்.எம்.சித்தீக் அவர்களின் வாழ்வும் பணியும் எனும் நூல் காத்தான்குடி அல் மனார் மண்டபத்தில் சற்றுமுன் வெளியீட்டு வைக்கப்பட்டது.
வழமையான நூல் வெளியீட்டு வைபவங்களைப் போல் அல்லாமல் வித்தியாசமான ஒரு நூல் வெளீட்டு விழாவாக இந்த நிகழ்வு இருந்தது.
சித்தீக் sir காத்தான்குடியின் ஆளுமைகளில் ஒன்று அவரது பிள்ளைகள் தந்தையின் ஆளுமை இலக்கிய புலமை சமூக செயற்பாட்டை ஒரு முகப்படுத்திய தந்தையை கெளரவப்படுத்திய மிகப் பெரிய விழா இது.
தந்தை உயிருடன் இருக்கும் போது பிள்ளைகள் தந்தையை எவ்வாறு கெளரவப்படுத்த வேண்டும் என்பதற்கு இவ் விழா ஒரு முன் மாதிரியான விழா.
காத்தநகரின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள் இலக்கிவாதிகள் துறை சார்ந்தவர்கள் சிவில் சமூக பிரதி நிதிகள் வர்த்தகர்கள் என பல்துறை சார்ந்தோரையும் அழைத்து அவர்கள் முன்னிலையில் தமது தந்தையை கெளரவப்படுத்தி தந்தையின் ஆளுமை வெளியிட்டமை இன்னும் ஒரு சிறப்பம்சமாகும்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
25.09.2020
No comments:
Post a Comment