காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அல் அக்ஷா விடுதிக் கட்டிடத் தொகுதி முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 26, 2020

காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அல் அக்ஷா விடுதிக் கட்டிடத் தொகுதி முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அல் அக்ஷா விடுதிக் கட்டிடத் தொகுதி நேற்று (25.09.2020) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது. 

புதிய காத்தான்குடி அல் அக்ஷா பள்ளிவாயல் வளாகத்தில் இந்த அல் அக்ஷா விடுதி கட்டிடத் தெககுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

இதனை திறந்து வைத்த வைபவத்தில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், புதிய காத்தான்குடி அல் அக்ஷா பள்ளிவாயலின் தலைவரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான கே.எல்.எம்.பரீட், மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.ஐ.ஜவாஹிர் உட்பட பள்ளிவாயல் நிருவாகிகள் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், உலமாக்கள் என பலரும் கலந்;து கொண்டனர். 

இந்த விடுதிக் கட்டிடத் தொகுதி புதிய காத்தான்குடி அல் அக்ஷா பள்ளிவாயலினால் பராமரிக்கப்படவுள்ளது. 

குளிரூட்டப்பட்ட 17 அறைகளைக் கொண்ட இந்த விடுதிக் கட்டிடத் தொகுதி கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment