கொங்கிறீட் இட்டுக் கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி பலி - News View

About Us

About Us

Breaking

Saturday, September 26, 2020

கொங்கிறீட் இட்டுக் கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி பலி

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலுகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (25) மாலை 5.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் கொங்கிறீட் போடும் இயந்திரத்தின் உதவியுடன் கொங்கிறீட் போட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவரே மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த இயந்திரத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்த மின்கம்பியிலிருந்து குறித்த நபர் மின் தாக்குதலுக்கு உள்ளானதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மின் தாக்குதலுக்கு உள்ளான நபர், பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment