சாய்ந்தமருதில் ஒரே இடத்தில் தொடர்ந்த மற்றுமொரு விபத்து : இந்த வாரத்தில் மட்டும் இந்த பிரதேசத்தில் மூன்று பாரியளவிலான விபத்துக்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

சாய்ந்தமருதில் ஒரே இடத்தில் தொடர்ந்த மற்றுமொரு விபத்து : இந்த வாரத்தில் மட்டும் இந்த பிரதேசத்தில் மூன்று பாரியளவிலான விபத்துக்கள்

நூருள் ஹுதா உமர்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதான வீதி ரெட்சிலிக்கு அருகாமையில் இன்று மாலை கார் ஒன்றும் பயணிகள் பேருந்தும் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித பாரியளவிலான காயங்களும் இல்லாது பாதுகாக்கப்பட்டிருந்தும் வாகனங்கள் கடுமையாக சேதமாகியுள்ளது. 

தகவலையறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கல்முனை போக்குவரத்து பொலிஸார் வீதியின் போக்குவரத்தை சீர் செய்ததுடன் சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதி ஒழுங்குகளை சரியாக பின்பற்றாமை, வேகமாக வாகனத்தை செலுத்துதல் போன்ற காரணங்களினால் இதே பிரதேசத்தில் இவ்வாரம் நடைபெறும் மூன்றாவது விபத்தாக இது கொள்ளப்படுவதுடன் தொடர்ந்தும் சம்பவம் நடந்த இதே இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரு இளைஞர் மரணமடைந்ததுடன் மற்றுமொறு இளைஞர் இப்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad