மக்கள் மீது சுமையை சுமத்தாது உரிய நடவடிக்கை எடுத்துவரும் அரசு - நுண்கடன் சுமைகளுக்கு தீர்வு என்கிறார் வியாழேந்திரன் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

மக்கள் மீது சுமையை சுமத்தாது உரிய நடவடிக்கை எடுத்துவரும் அரசு - நுண்கடன் சுமைகளுக்கு தீர்வு என்கிறார் வியாழேந்திரன்

உயிர்த்த ஞாயிறு மற்றும் கொவிட் 19 சவால்களுக்கு மத்தியில் மக்கள் மீது சுமையேற்றாது அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மத்திய வங்கி அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், 4,000 தபால் நிலையங்களும் 24 ஆயிரம் ஊழியர்களும் கொண்ட தபால் சேவையில் கடந்த வருடம் 5,600 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டது. செலவை குறைத்து உயர்ந்த சேவை வழங்கும் நிறுவனமாக இதனை முன்னேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். 

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் தபால் நிலையங்கள் பாதிக்கப்பட்டன. மலையகத்திலும் கிராமங்களிலும் உள்ள தபால் நிலையங்களையும் முன்னேற்ற வேண்டும்.

நுண் கடன் செலுத்த முடியாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீட்டுக் கடன் செலுத்த முடியாமல் பலர் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டனர். லீசிங் கம்பனிகள் 20 வீதத்தில் மேல் வட்டி அறவிட்டன. இவற்றை அரசாங்கம் 09 வீதம் வரை குறைத்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad