அலி சப்ரி ரஹீமின் இடத்திற்கு அமைச்சர் அலி சப்ரி நியமிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

அலி சப்ரி ரஹீமின் இடத்திற்கு அமைச்சர் அலி சப்ரி நியமிப்பு

இலங்கையில் 5 இலட்சம் பேர் போதைக்கு அடிமை - நீதி அமைச்சர்! | NewUthayan
பாராளுமன்ற விவகார குழுவிலிருந்து முஸ்லிம் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விலகியுள்ளார். 

இந்த வெற்றிடத்திற்கு அமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது. இதன் போதே சபாநாயகர் இதனை அறிவித்தார். 

பாராளுமன்ற விவகார குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள அலி சப்ரி தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வில் சர்ச்சை ஏற்பட்டது. அவர் எம்.பி அலி சப்ரியா அல்லது அமைச்சர் அலி சப்ரியா என்பது தொடர்பில் வினா எழுப்பப்பட்டது தெரிந்ததே.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad