மருத்துவ பீட மாணவர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரிப்பு - கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

மருத்துவ பீட மாணவர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரிப்பு - கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிப்பு

அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 350 ஆக அதிகரிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு தேவையான வளங்கள் மற்றும் திறன்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மருத்துவ பீடாதிபதிகளுடன் முன்னெடுத்த பல சுற்றுக் கலந்துரையாடல்களின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad