இஷாக் எம்.பி.யின் முயற்சியில் நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாயல் திறந்து வைப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, September 18, 2020

இஷாக் எம்.பி.யின் முயற்சியில் நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாயல் திறந்து வைப்பு

ஹொரொவ்பொத்தான தெம்பிரியெத்தேவலயில் நிர்மானிக்கப்பட்ட புதிய ஜும்மா பள்ளிவாயல் 2020.09.18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் வேண்டுகோளுக்கு இணங்க அல்ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் ஊடாக குவைட் நாட்டு நிதியொதுக்கீட்டில் இப்பள்ளிவாயல் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் நூருல்லாஹ், சமூக சேவையாளர் ARM. தாறிக், முன்னாள் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் சஹீது ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad