ஐக்கிய நாடுகள் பேரவை கூட்டத்தில் ஜனாதிபதியின் உரை வரவேற்கத்தக்கது எனக் கூறிய ஆளுங்கட்சி உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் அவரின் உரை அமைந்திருந்தது என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிதி ஆணைக்குழு செயற்திட்ட அறிக்கை மீதான சபை ஒத்தி வைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு ஆரம்பமானபோது நேரடியான அர்த்தங்களுடன் மிகவும் தெளிவான உரையை நிகழ்த்தியிருந்தார்.
180 நாடுகள் பங்குபற்றிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டத்தில் அவர் எமது நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் உரையாற்றியிருந்தார்.
அதன்போது வறுமை நிலையை ஒழிப்பதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம் என்றும், கல்வி மற்றும் சுகாதார துறையின் அபிவிருத்தி தொடர்பாகவும் தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அவர் அதன்போது குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக உள்நாட்டு விடயங்களில் தேவையில்லாத தலையீடுகளை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளக்கூடாது அவர் தெளிவாக தெரிவித்திருந்தார். இது உண்மையிலே வரவேற்கத்தக்க கூற்றாகும் என்றார்.
No comments:
Post a Comment