எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகர் சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், எஸ்பிபி நலமாக இருக்கிறார் எனக் கூற முடியாது. உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ பாலசுப்ரமணியம் அவர்கள் அனைத்து வலிமையும், நம்பிக்கையுடனும் பூரண உடல்நலம் பெற வேண்டும் என எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனக்காக நீங்கள் நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி.. லவ் யூ சார்...’ என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் எஸ்பிபி சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்.
சந்திப்புக்கு பின் அவர் கூறியவதாவது, எஸ்பிபி நலமாக இருக்கிறார் எனக் கூற முடியாது. உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்தார்.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் திகதி மோசமடைந்தது. பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார்.
உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார். ஆனால், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment