கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் அழைப்பின் பேரில் புதிதாக திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற சட்டத்தரணியும் பிரபல ஊடகவியலாளருமான பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் முதுநபீன் அவர்களுடனான சமூக மேம்பாடு தொடர்பிலான சினேகபூர்வ கலந்துரையாடல் 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை 8.30 மணியளவில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் விமர்சையாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் தலைவர் வைத்திய கலாநிதி எம். எச்.ரிஸ்பின் செயலாளர் எஸ்.எல்.எம். இப்ராஹிம் மற்றும் செயற்குழு, நிருவாக குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி கலந்துரையாடல் நிகழ்வில்
01. சமூக மேம்பாடு தொடர்பில் அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய நிலையை மேம்படுத்த வேண்டிய அவசியம்
02. பொது அரசியலின் பின்னணியில் கற்ற சமூகத்தின் பங்களிப்பு (Intellectual behind the politics)
03. அம்பாறை மாவட்டத்தில் இன நல்லுறவின் அவசியம்
04. பிரிவினை கடந்த சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் செயற்திட்டங்கள்
05. சமூக ரீதியான அரசியல் கலாச்சாரத்தை முன்னேற்ற வேண்டிய அவசியம்
06. இந்த நாட்டில் முஸ்லிம்களின் இருப்பு ஏனைய சமூகங்களை ஒற்றுமையின் பால் அரவணைக்க வேண்டிய அவசியம்
07. முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஒன்றிணைத்து செயற்பட வேண்டிய அவசியம்
போன்ற விடயங்கள் தொடர்பாகவும் சமகால அரசியல், நமது சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதனை உணர்வுகளுக்கு அப்பால் கையாள வேண்டிய விதம் போன்றவை தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டான.
No comments:
Post a Comment