தேசிய லொத்தர் சபையின் மூலம் சந்தைப்படுத்தப்படும் மெகா பவர் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் ஒரு வெற்றியாளருக்கு 23 கோடி ரூபாவுக்கு (ரூ.236,220,278.35) மேலான தொகையை நேற்று முன்தினம் வெல்லப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு வரலாற்றில் இது ஆகக்கூடுதலான பரிசுத் தொகையாகும். வெற்றிக்குரிய அதிர்ஷ்ட சீட்டு கண்டி கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த முகவரால் விற்கப்பட்டுள்ளது.
மெகா பவர் அதிர்ஷ்ட என்ற இந்த சீட்டிழுப்பு 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதாக தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர் தர்ஷன விஜய சிறிவர்த்தன தெரிவித்தார்.
23 கோடி ரூபா என்பது இலங்கை வரலாற்றில் அதிர்ஷ்ட சீட்டுக்காக வழங்கப்படும் ஆகக்கூடுதலான பரிசுத் தொகையாகும். இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டில் கொவி செத அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பின் மூலம் ஒருவர் வென்ற 13 கோடி ரூபாவே ஆகக்கூடுதலான பரிசுத் தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment