மன்னாரிலிருந்து கொழும்புக்கு கடத்தி செல்லப்பட்ட 100 கிலோ கஞ்சா மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

மன்னாரிலிருந்து கொழும்புக்கு கடத்தி செல்லப்பட்ட 100 கிலோ கஞ்சா மீட்பு

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நேற்று முன்தினம் இரவு இராணுவத்தினருடன் பொலிசார் நடத்திய வீதிச் சோதனையின்போது மன்னாரிலிருந்து கொழும்பிற்கு கடத்திச் செல்லப்பட்ட 103 கிலோ 200 கிராம் கொண்ட 10 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

இது குறித்து தெரியவருவதாவது, நேற்று முன்தினம் இரவு மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் குஞ்சுக்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் பொலிசார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் மன்னார் வங்காலைப் பகுதியிலிருந்து கொழும்பிற்கு மீன்களை எடுத்துச் செல்லும் மீன் கூலருக்குள் மீன் பெட்டிகளுக்கிடையே 49 பொதிகளில் எடுத்து செல்லப்பட்ட 103 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சாவினைக் கைப்பற்றியுள்ளதுடன் இதன் பெறுமதி 10 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது வாகனத்தில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்டவர்கள் அம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 36, 38 வயதுடையவர்கள். இது குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஓமந்தை விசேட நிருபர்

No comments:

Post a Comment