தேங்காய்க்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் - இன்று முதல் அமுல் - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

தேங்காய்க்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் - இன்று முதல் அமுல்

இன்று (25) முதல் அமுலாகும் வகையில் தேங்காய்க்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

சுற்றளவின் அடிப்படையில் ரூபா 60 முதல் ரூபா. 70 வரை உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேங்காயின் சுற்றளவு
12 அங்குலத்திற்கு குறைவு - ரூபா. 60
12 - 13 அங்குலம் - ரூபா. 65
13 அங்குலத்திற்கு அதிகம் - ரூபா. 70

அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர், விநியோகத்தர் அல்லது வியாபாரி எவரேனும் குறித்த உச்சபட்ச சில்லறையை விலைகளுக்கு கூடுதலாக, விற்பனை செய்யவோ, விற்பனைக்கு விடவோ, விற்பனைக்கு வெளிப்படுத்தவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை குறித்த வர்த்தமானியில் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment