சீனாவின் வடமேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாம்களின் எண்ணிக்கை முன்னர் நம்பப்பட்டதை விடவும் அதிகமாக இருப்பதாகவும் அது மேலும் விரிவடைந்து வருவதாகவும் அவுஸ்திரேலியாவின் ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் 380 க்கும் அதிகமான சந்தேகத்திற்கு இடமான தடுப்பு முகாம்கள் இருப்பதாகவும் அங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்கள் மற்றும் ஏனைய முஸ்லிம் துருக்குகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவுஸ்திரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை முன்னர் கணிக்கப்பட்டதை விடவும் 40 வீதம் அதிகமாகும்.
செய்மதிப் படங்கள், சாட்சியங்கள், ஊடக அறிக்கைகள் மற்றும் கட்டுமானங்களுக்கான உத்தியோகபூர்வ கேள்விமனுக் கோரல் ஆவணங்களை பயன்படுத்தியே இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. இதில் மேலும் குறைந்தது 61 தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டு வருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவைகளை பயிற்சி மையங்களாக அழைக்கும் சீன நிர்வாகம் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு இவை அவசியம் என்று கூறுகிறது.
No comments:
Post a Comment