மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஓருங்கிணைப்பு தலைவராக நியமனம் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) மயிலங்கரச்சை வாழ் மக்களால் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கும் நிகழ்வு இன்று நாவலடி கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்றது.
இந்த வாரம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள சென்ற வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிடமாகவிருந்த குறித்த பதவி வெற்றிடத்திற்கு நியமனக் கடிதத்தை பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு தரை வழியாக மீண்டும் அழைத்து வரப்பட்ட வேளை மயிலங்கரச்சையில் ஒன்றுகூடி காத்திருந்த மக்களால் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
வழியில் காத்திருந்த மக்கள் பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஓடும் வாகனத்தில் சென்றவாறு தமது கைகளை அசைத்தவாறு நன்றி தெரிவித்தவாறு சென்று கொண்டிருந்தார்.
இதேவேளை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்கும் முகமான பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment