கண்டியில் கட்டட இடிபாட்டில் உயிரிழந்த குழந்தை மற்றும் பெற்றோரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன! - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

கண்டியில் கட்டட இடிபாட்டில் உயிரிழந்த குழந்தை மற்றும் பெற்றோரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன!

கண்டி - பூவெலிகட பிரதேசத்தில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை மற்றும் பெற்றோரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றன.

கடந்த 20ஆம் திகதி குறித்த பகுதியில் 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்த நிலையில் அதில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருந்ததுடன் இருவர் மீட்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, இந்த கட்டட இடிபாடு தொடர்பாக உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டுள்ள, இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பிரதேசவாசிகளும் முறையான விசாரணையை கோரியுள்ளனர்.

இதேவேளை, உடைந்து வீழ்ந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின்போது உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாமை உறுதிசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad