எட்டு புதிய இராஜதந்திர அதிகாரிகளை நியமிக்க உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

எட்டு புதிய இராஜதந்திர அதிகாரிகளை நியமிக்க உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு அனுமதி

புதிய இராஜதந்திர அதிகாரிகளாக பெயரிடப்பட்டிருந்த 8 பேரை அந்தப் பதவிகளுக்கு நியமிக்க பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று பிற்பகல் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, C.A.சந்திரபிரேம ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாகவும், S.அமரசேகர தென் ஆபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும், ஓய்வுபெற்ற அட்மிரல் K.K.V.P.ஹரிஸ்சந்திர சில்வா ஆப்கானிஸ்தானுக்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

ஜப்பானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக விஷ்ரமால் சஞ்ஜீவ குணசேகர நியமிக்கப்படவுள்ளார். இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக மிலிந்த மொறகொடவும், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக ரவிநாத ஆரியசிங்கவும் நியமிக்கப்படவுள்ளனர்.

பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகமவை பிரான்ஸிற்கான இலங்கை தூதுவராகவும், கலாநிதி பாலித்த கொஹனவை சீனாவிற்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்க உயர் பதவிகள் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழு அனுமதியளித்துள்ளது.

No comments:

Post a Comment