மட்டக்களப்பில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, September 11, 2020

மட்டக்களப்பில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது

மட்டக்களப்பில் வாளுடன் மக்களை அச்சுறுத்திய இளைஞர் கைது | Athavan News

மட்டக்களப்பு - கருவப்பங்கேணி பகுதியில், வாள் ஒன்றுடன் இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரேயே நேற்று (வியாழக்கிழமை) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு 7 மணியளவில் மோட்டர் சைக்கிளில், இளைஞர் ஒருவர் வாளுடன் வீதியில் சுற்றித்திரிந்து, பொதுமக்களை பயமுறுத்தி வருவதாக பொலிஸாரின் அவசர இலக்கம் 119 இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வாளுடன் இளைஞரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad