கட்டாரிலிருந்து 59 பேர், குவைத்திலிருந்து 293 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 288 பேர், சீனாவிலிருந்து 168 பேர் இலங்கை வருகை - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 1, 2020

கட்டாரிலிருந்து 59 பேர், குவைத்திலிருந்து 293 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 288 பேர், சீனாவிலிருந்து 168 பேர் இலங்கை வருகை

SriLankan to begin direct flights from Colombo to Visakhapatnam - Srilanka  News | DSRmedias.com
மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றிலிருந்து இலங்கையர்கள் 640 பேர் இன்று (01) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரின் டோஹாவிலிருந்து 59 பேரும், குவைத்திலிருந்து 293 பேரும் வருகை தந்துள்ளனர். அவர்களில் 03 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலைவாய்ப்புக்காக சென்றிருந்த 288 பேர் துபாயிலிருந்து வருகை தந்துள்ளனர். அவர்களில் 03 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் சீன முதலீட்டு திட்டங்களில் பணியாற்றும் சீன பிரஜைகள் 168 பேரை ஏற்றிய விமானமொன்று நேற்று (31) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad