
மின்னேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜயந்திபுர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். நேற்று (31) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயலில் அறுவடை வேலையில் ஈடுபட்டிருந்த தம்பதியினர் மீது மின்னல் தாக்கிய நிலையில், அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் ஜயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜயந்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மின்னல் தாக்கியதில் காயமடைந்த அவரது கணவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment