(இராஜதுரை ஹஷான்)
அரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிர்தரப்பு உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்குவார்கள். ஆதரவு வழங்குவதால் அவர்களை அரசாங்கத்தில் ஒருபோதும் இணைத்துக் கொள்ளமாட்டோம். திருத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்கான பெரும்பான்மை பலம் ஆளும் தரப்பினரிடம் உள்ளது என சமுர்த்தி, மனைப்பொருளாதார, நுண்நிதி, சுயத்தொழில், மற்றும் உழைப்பு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இல்லாத காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு எதிர்தரப்பினர் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை எதிர்க்கிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற ஜனநாயகம், ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை என குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் மறைமுக அரசியல் பழிவாங்களை கொண்டு அரசியமைப்பின் 19 ஆவது திருத்த்ததை கொண்டுவந்தது. நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதுடனும், 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட குறைபாடுகளையும் அப்போது சுட்டிக்காட்டினோம்.
திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை திருத்த அரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ஒரு வார காலததிற்குள் கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி பதவி வகித்தபோது பாராளுமன்றத்திற்கு வந்து எதிர்தரப்பின் உறுப்பினர்களிடன் தனிப்பட்ட முறையில் வாக்குறுதி வழங்கினார்.
20 ஆவது அரசியமைப்பு திருத்தம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 1 வாரத்திற்குள் அல்ல 5 வருட கால பதவி காலத்தில் நிறைவேற்றவில்லை.
ராஜபக்ஷர்களை இலக்குப்படுத்தி கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தம் நல்லாட்சிக்கு சாபக்கேடாக அமைந்தது என்பதை அவரே ஏற்றுக்கொண்டார். கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு இடையில் அதிகார முரண்பாடுகள் ஏற்பட்டன. இதன் விளைவை நாட்டு மக்களே இறுதியில் அனுபவித்தார்கள் என்றார்.
No comments:
Post a Comment