20 ஆவது திருத்தம் ஊடாக ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு பொருந்தும் விடயங்கள் முழுமையாக செயற்படுத்தவார்கள் : அதாவுல்லா - News View

About Us

About Us

Breaking

Monday, September 21, 2020

20 ஆவது திருத்தம் ஊடாக ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு பொருந்தும் விடயங்கள் முழுமையாக செயற்படுத்தவார்கள் : அதாவுல்லா

(இராஜதுரை ஹஷான்) 

நாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு அமையவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். பிற நாடுகளின் அழுத்தங்கள், கருத்துக்களுக்கமைய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது முரண்பாடுகளையே தோற்றுவிக்கும். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஊடாக ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு பொருந்தும் விடயங்கள் முழுமையாக செயற்படுத்தவார்கள் என தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார். 

தேசிய காங்கிரசின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது தீவிரவாதத்ததை ஒழித்தல், வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு கிழக்கு தனி மாகாணமாக செயற்படல் மற்றும் அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்தோம். 

தேசிய காங்கிரஸ் சார்பில் முன்வைத்த பிரதான மூன்று கோரிக்கைகளில் தீவிரவாததத்தை ஒழித்தல், கிழக்கு மாகாண சபை உருவாக்கம் ஆகிய இரண்டு கோரிக்கைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவி வகித்தவேளை நிறைவேற்றினார். 

அனைத்து இன மக்களின் அபிலாசைகளுக்கும் அமைய புதிய அரசியமைப்பு உருவாக்கம் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதற்கு பல அரசியல் காரணிகள் அக்காலக்கட்டத்தில் தாக்கம் செலுத்தின. 

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிடம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளோம். பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி அக்கட்சி தலைமையிலான அரசாங்கம் தற்போது அமைந்துள்ளது. 

அத்துடன் ஆளும் தரப்பினருக்கு நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கியுள்ளார்கள். அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதால் புதிய அரசியமைப்பினை இலகுவில் உருவாக்க முடியும். 

நாட்டு மக்கள் அனைவரது அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியமைப்பு உருவாக்கத்தில் உள்ளடங்க வேண்டும். எமது நாட்டு அரசியமைப்பு உருவாக்கத்தில் பிற நாட்டவர்கள் தயாரிக்க முற்படும் போது அது முரண்பாடுகளையே தோற்றுவிக்கும் என்பதை கடநத கால சம்பவங்களின் ஊடாக அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment