20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பிற்கு முரணாக 20 ஆவது திருத்தம் காணப்படுவதாக உத்தரவிடுமாறு இந்த மனுவினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் பெற வேண்டும் எனவும், பொதுமக்கள் கருத்துக்கணிப்பை பெறுதல் வேண்டும் எனவும் உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் இந்த மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மேலும் 06 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment