கல்முனை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

கல்முனை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

கல்முனை 2ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை 2ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) காலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

இப்பெண்ணின் சடலத்தை உடனடியாக இனங்காண பொலிஸார் முயற்சி செய்த போதிலும், அது பலனளிக்கவில்லை. இதனால் பொதுமக்களின் உதவியை நாடி சடலம் தொடர்பாக அறிவித்து இனங்காண உதவுமாறு கேட்டிருந்தனர்.

அதன் பின்னர் அதிகளவான மக்கள் வந்து பார்வையிட்டு சென்றிருந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் மகள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

கல்முனை 02ஆம் பிரிவு அன்னை வேளாங்கண்ணி வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான 75 வயது மதிக்கத்தக்க சின்னத்தம்பி நேசம்மா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருதுடன், சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்,சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

(பாறுக் ஷிஹான்)

No comments:

Post a Comment