20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

திருத்தத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு அவசியம் என அறிவிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad