ஐ.நா. ஊழியர்கள் எங்கள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் - ரஷிய ஜனாதிபதி அதிரடி - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

ஐ.நா. ஊழியர்கள் எங்கள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் - ரஷிய ஜனாதிபதி அதிரடி

ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் தன்னார்வாக எங்கள் ஸ்பட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 75வது ஆண்டு தினத்தை நினைவுகூரும் வகையில் பொதுச் சபைக் கூட்டம் ஒன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ், பொதுச் சபைத் தலைவர் வோல்கன் போஸ்கிர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உலக நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி வழியே கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புதின், சீன ஜனாதிபதி ஜின்பிங், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களும் பேசுகின்றனர்.

இந்நிலையில், ஐ.நா. கூட்டத்தில் நேற்று ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் வீடியோ கொன்ப்ரன்ஸ் மூலம் பங்கேற்றார். 

ஐ.நா. கூட்டத்தில் ரஷிய ஜனாதிபதி புதின் கூறியதாவது மருத்துவர்களின் அறிவியல், தொழில்த்துறை மற்றும் பரிசோதனை அனுபவங்களின் மூலம் கொரோனா வைரசை கண்டறிந்து சிகிச்சையளிக்க பலவிதமான சோதனை முறைகள் மற்றும் மருந்துகளை ரஷியா உருவாக்கியுள்ளது, மேலும், உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி யை நாங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நாங்கள் முற்றிலும் வெளிப்படையான மற்றும் கூட்டாகவும் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். 

கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவது தொடர்பாக எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட விருப்பமுல்ல நாடுகள் பங்கேற்கும் வகையில் கூடிய விரைவில் உயர்மட்ட அளவிலான ஒன்லைன் மூலம் வீடியோ கருத்தரங்கு ஒன்று ஏற்பாடும் செய்யலாம் என இந்த சபை மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்ற நாடுகளிலும் நம்பகமான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு வழங்கவும், கொரோனா தடுப்பூசி தொடர்பான எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், தடுப்பூசி குறித்த ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். 

மற்றவர்களுக்கு பரவியது போன்றே பல்வேறு பகுதிகளில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களும், அதன் தலைமையிடத்தில் இருக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக தேவையான உதவிகளை செய்ய ரஷியா தயாராக உள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக ஊழியர்கள் விருப்பத்தின் பெயரில் வந்தால் அவர்களுக்கு எங்கள் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக வழங்க நாங்கள் முன்வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment