பள்ளத்தில் வீழ்ந்த வேன் இருவர் பலி, மூவர் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Saturday, August 22, 2020

பள்ளத்தில் வீழ்ந்த வேன் இருவர் பலி, மூவர் வைத்தியசாலையில் அனுமதி

இராவணா எல்ல பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்த வேன்; இருவர் பலி-Ravana Ella Accident-2 Killed
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல - வெல்லவாய வீதியில் இராவணா எல்ல பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வேனில், அதன் சாரதி உட்பட 6 ஆண்கள் பயணித்திருந்ததோடு, இதில் 5 பேர் காயமடைந்து சிறிகல, பதுளை, வெல்லவாய, தெமோதறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெமோதறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வேனில் பயணித்த மேலும் ஒருவர் அதில் சிக்கியுள்ள நிலையில், அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment