குருணாகல், அலவ்வ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலக்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (22) அதிகாலை 4.05 மணியவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குருணாகல் - கொழும்பு வீதியால், குருணாகலுக்கு பயணித்த காரும், எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்குநேர் மோதி இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் கார் சாரதி உட்பட ஆண்கள் 5 பேர் படுகாயமடைந்ததை தொடர்ந்து, அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில், டிப்பர் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment