
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, காங்கேசந்துறை முதல் மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 - 70 முதல் கிலோ மீற்றர் வரை அதிகரித்துக் காணப்படும்.
குறித்த கடல் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகள் ஆபத்தானது என்பதோடு, இது தொடர்பாக கடல் தொழிலில் ஈடுபடுவோர் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிரதேசங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.
பேருவளை முதல் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்கரை பிரதேசங்களில் கடல் அலை 2 தொடக்கம் 2.5 மீற்றர் வரை உயர்வடையக்கூடும் என்பதோடு, கடல் அலை நிலப்பிரதேசத்தை நோக்கி வரும் வாய்ப்பு உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment