ஊருக்குள் நுழைந்த காட்டு யானை கிணற்றில் விழுந்தது - News View

About Us

About Us

Breaking

Sunday, August 23, 2020

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை கிணற்றில் விழுந்தது

கிணற்றில் விழுந்த காட்டு யானை
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் இன்று (23) அதிகாலை 2 மணி அளவில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று கிராமவாசி ஒருவருடைய கிணற்றில் விழுந்துள்ளது.

தொடர்ச்சியாக ஊருக்குள் நடமாடித் திரியும் இந்த காட்டு யானை இன்றைய தினமும் ஊருக்குள் நடமாடி திரிந்த சமயம் கிராமவாசி ஒருவரின் கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

கிணற்றில் விழுந்த யானையை வெளியேற்றுவதற்காக உரிய அதிகாரிகளுக்கு மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் தொடர்ச்சியாக காட்டு யானையின் அச்சுறுத்தலின் மத்தியில் மக்கள் வாழ்ந்து வருவது வழமையாக உள்ளது

யானை வேலிகளை அமைக்குமாறு மக்கள் கோரி வருகின்ற நிலையில் குறித்த யானையானது தொடர்ச்சியாக குறித்த பகுதி மக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக குறித்த பகுதியில் காணப்படும் தரம் 5 உட்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் யானைகள் நடமாடி திரிவதனால் மாணவர்கள் அச்சத்தின் மத்தியில் பாடசாலைக்கு சென்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment