மரணமான பெண்ணின் இறுதிக் கிரியைகள் கொடிகாவத்தை மயானத்தில் - இராணுவத்தின் உதவியுடன் கணவர் கலந்துகொள்ள அனுமதி - News View

About Us

About Us

Breaking

Sunday, August 23, 2020

மரணமான பெண்ணின் இறுதிக் கிரியைகள் கொடிகாவத்தை மயானத்தில் - இராணுவத்தின் உதவியுடன் கணவர் கலந்துகொள்ள அனுமதி

12ஆவது மரணம் பதிவு; இந்தியாவிலிருந்து வந்த 47 வயது பெண்-12th COVID19 Death Reported at IDH-47-Yr Old Arrived from India-1
இலங்கையில் 12ஆவது கொவிட்-19 நோய் காரணமான மரணம் பதிவாகியுள்ளது. இன்றையதினம் (23) பிற்பகல் 1.00 மணியளவில், கொடிகாவத்தை பொது மயானத்தில் அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (20) இந்தியாவிலிருந்து வந்த 47 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, IDH வைத்தியசாலை தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (20) UL 1126 எனும் விமானத்தின் மூலம், இந்தியாவிலிருந்து வந்த, எம்.எப். றிபானா எனும் மாவத்தகமவைச் சேர்ந்த குறித்த பெண், இரணவில தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 சோதனையில் அன்றையதினமே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், நேற்றையதினம் (22), IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளதோடு, அவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் என, அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றையதினம் (23) பிற்பகல் 1.00 மணியளவில், கொடிகாவத்தை பொது மயானத்தில் அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.

அவரது கணவர் தற்போது டொல்பின் ஹோட்டல் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்று (23) இடம்பெறும் அவரது மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள, இராணுவத்தின் உதவியுடன் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இறுதியாக கடந்த ஜூன் 01ஆம் திகதி இலங்கையில் 11ஆவது கொரோனா மரணம் பதிவாகியிருந்தது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமான மரணங்கள்

1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.

3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.

12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதி, 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.

No comments:

Post a Comment