லெபனான் வெடிப்பில் காணமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 30, 2020

லெபனான் வெடிப்பில் காணமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லெபனான் வெடிப்பு சம்பவம்! இலங்கையர்கள் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு -  Tamilwin
லெபனானில் அண்மையில் இடம்பெற்ற பாரிய வெடிச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இரண்டு இலங்கையர்கள் காயமடைந்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதுவர் ஷானி கருணாரத்ன குறிப்பிட்டார்.

மேலும் அவர்களில் அலுவலக சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டவருக்கு தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதுடன், வீடொன்றில் பணியாற்றியவருக்கு கால் முறிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அவர்களின் நிலை குறித்து ஆராய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் லெபனானில் 25 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகத்தின் சேமிப்புக் கிடங்கில் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் மொத்த நகரமும் கடும் பாதிப்புக்குள்ளானது.

கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்பில் 190 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், 6 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment