
2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிக்காலத்தில் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.
இதற்கமைய 81 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு குறித்து விரைவில் அரச உயர்மட்டம் தீர்மானம் எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment