ராஜபக்ஷர்களின் அதிகாரத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது - ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Monday, August 31, 2020

ராஜபக்ஷர்களின் அதிகாரத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது - ரஞ்சித் மத்தும பண்டார

ஜனாதிபதியை கொலைசெய்ய, சதித் திட்டம் தீட்டப்படவில்லை - ரஞ்சித் மத்தும பண்டார  ~ Jaffna Muslim
(செ.தேன்மொழி)

அரசாங்கம் ஜனநாயக தன்மையை கொண்ட அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவந்தால் அதற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ராஜபக்ஷர்களின் அதிகாரத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு தம்மால் ஆதரவளிக்க முடியாது என்றும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்திற்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்றுக் கொடுத்துள்ளனர். அரசாங்கம் அதனைக் கொண்டு நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்த ஆட்சியை பெற்றுக் கொடுப்பதை விடுத்து தங்களது குடும்ப ஆட்சியை பலப்படுத்திக் கொள்வதற்கான செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட ஆட்சிமுறையே மீண்டும் செயற்படுத்தப்படுமா? என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவது தொடர்பிலும், 20 ஆவது ஆரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவது தொடர்பிலுமே அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. அதற்கமைய 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டத்தை கொண்டுவருவதற்கே முயற்சிக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

ஆட்சியை கைப்பற்றியவுடனே குடும்ப அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்ற முயற்சிக்கும் இவர்கள், நாட்டின் சுற்றுச் சூழலையும், தேசிய உரிமைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. 

குருநாகலில் காணப்பட்ட தொல்பொருள் சிறப்புரிமை மிக்க இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரச மண்டபத்தை உடைத்த போது, அந்த நபர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய நபர் தங்களின் ஆதரவாளர் என்பதினால் அவரை பாதுகாத்தும் வருகின்றனர்.

சுற்றுச் சூழலை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு ஆட்சி அமைத்தவர்கள். ஆட்சிக்கு வந்தவுடனே அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வுகளில் ஈடுபடுவதற்கும் மண்ணை ஏற்றிச் செல்வதற்கும் அனுமதி வழங்கினர். தற்போது பாதுகாப்பு வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. 

புத்தளம் - ஆனைவிழுந்தான் பகுதியில் கண்டல் தாவரங்கள் வளர்க்கப்பட்டு வந்த பகுதியை அகழ்வு செய்தமை தொடர்பில் வர்த்தகர் ஒருவரும், பெகோ இயந்திரத்தின் சாரதியும் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பின்னால் இருக்கும் அரசியல்வாதி தொடர்பில் இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சிங்கராஜா வனத்திலும் பாதை அமைப்பதற்கு அழிவுகள் இடம்பெற்றுள்ளன. இதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சூரியகந்த பகுதியில் ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்காக காடுகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது பொலிஸாரும் அவர்களுடைய கடமையை செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். இதற்காகவா? மக்கள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்துள்ளனர். 

ஜனநாயக தன்மையை கொண்ட ஆட்சியை செயற்படுத்தும் நோக்கத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டால் நாங்கள் ஆதரவளிப்போம். ராஜபக்ஷர்களின் குடும்ப அதிகாரத்தை மேலும் பலப்படுத்தும் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.

கேள்வி : 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தையும் நீக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் : 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மக்கள் மத்தியில் காணப்பட்ட முரண்பாடுகளை இல்லாமல் செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி இதனை கொண்டுவரும் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

No comments:

Post a Comment