போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது - அச்சிடும் நிலையமும் சுற்றிவளைப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, August 31, 2020

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது - அச்சிடும் நிலையமும் சுற்றிவளைப்பு

TamilMirror.lk
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நேற்று (31) இடம்பெற்றுள்ளது.

தங்காலை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால், வீரகெட்டிய, அங்குணுகொல வீதியில் ஹுன்னகும்புர சந்தியில் போலி நாணயத்தாளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 5,000 ரூபா பெறுமதியான 200 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, உடயால பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சிடப்படும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு, மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, அங்கிருந்து போலி நாணயத்தாள் அச்சிட பயன்படுத்தப்படும் இயந்திரமொன்று உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக இச்சந்தேகநபர்கள் இருவரும், வீரகெட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஹதுருவெல, உடயால பிரதேசங்களைச் சேர்ந்த 27, 39 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களை இன்று (01) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர். இச்சந்தேகநபர்களிடம், விரிவான விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad