ரணிலின் சாதனையை முறியடித்தார் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Friday, August 7, 2020

ரணிலின் சாதனையை முறியடித்தார் மஹிந்த

மஹிந்த - ரணில் கூட்டு நிர்வாகத்தின் ...
இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்ற சாதனையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச படைத்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த 05 இலட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 05 இலட்சத்து 566 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

பொதுத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இது பதிவானது. 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்க 04 இலட்சத்து 64 ஆயிரத்து 588 வாக்குகளைப் பெற்றிருந்தார். 

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 05 இலட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment