பிள்ளையான், பிரேமலால் ஜயசேகர சிறைக்குள்ளிருந்தவாறே தேர்தலில் வெற்றி - News View

About Us

About Us

Breaking

Friday, August 7, 2020

பிள்ளையான், பிரேமலால் ஜயசேகர சிறைக்குள்ளிருந்தவாறே தேர்தலில் வெற்றி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியிட்ட இருவர் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். 

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கொலைக் குற்றவாளியாக மரண தண்டனை வழங்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவும், மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுமே இவ்வாறு இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். 

1,04,237 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள பிரேமலால் ஜயசேகர இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அதிக விருப்பு வாக்குகள் பெற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் காவத்தையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் 54,198 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

No comments:

Post a Comment