வாக்கு மூலம் வழங்க சமுகமளிக்க முடியாது, தேவை எனில் வீட்டிற்கு வாருங்கள் - மைத்திரிபால - News View

About Us

About Us

Breaking

Saturday, August 22, 2020

வாக்கு மூலம் வழங்க சமுகமளிக்க முடியாது, தேவை எனில் வீட்டிற்கு வாருங்கள் - மைத்திரிபால

சுதந்திரக் கட்சிக்குள் மைத்திரிபால ...
(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் வாக்கு மூலம் அளிக்க ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தன்னால் அந்த பொலிஸ் பிரிவில் ஆஜராக முடியாது என முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மைதிரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அதன்படி தனது வாக்கு மூலம் அவசியமாயின் கொழும்பிலுள்ள தனது வீட்டிற்கு வந்து அதனை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்குமாறு குறித்த ஆணைக்குழு அறிவித்தல் அனுப்பியிருந்தது. அது தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால மேற்படி பதிலை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த தினத்தில், உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்று வாக்கு மூலத்தை பதிவுசெய்ய தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment