சிறுவர்களுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபவர்களுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்க முடியும் - அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Saturday, August 22, 2020

சிறுவர்களுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபவர்களுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்க முடியும் - அமைச்சர் அலி சப்ரி

அனைத்து இன மக்களும் அச்சமின்றி ...
(எம்.மனோசித்ரா)

சிறுவர்களுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு தேவையேற்படின் விசேட நீதிமன்றமொன்றை அமைச்சரவையின் அனுமதியுடன் ஸ்தாபிக்க முடியும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற சில விடயங்களை தொடர்ந்தும் மறைத்து வைக்க முடியாது. அவை மிகவும் முக்கியமான காரணிகளாகும். சிறுவர்கள் சிறு பருவத்தில் ஏதேனும் அசம்பாவிதங்களுக்கு முகங்கொடுப்பார்களாயின் அதனால் ஏற்படும் பாதிப்பு அவர்களது வாழ் நாள் முழுவதும் காணப்படும்.

எனவே நாம் எவ்வாறேனும் இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது எமக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை ஆராய்ந்து அவற்றை உருவாக்க முடியும்.

புதிய சட்டங்கள் மாத்திரமல்ல. தேவையேற்படின் அமைச்சரவையின் அனுமதியுடன் சிறுவர் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு விஷேட நீதிமன்றத்தை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். காரணம் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும் என்றார்.

No comments:

Post a Comment