
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இவ்வாறு பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கஞ்சா, ஹெரோயின் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதுடன், கஞ்சா மற்றும் ஹெரோயின்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென யாழ்ப்பாணம் பொலிஸார் அறிவித்தனர்.
No comments:
Post a Comment