மேல் மாகாணத்தில் பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம் - பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ண - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 1, 2020

மேல் மாகாணத்தில் பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம் - பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ண

பொலிஸ் அதிகாரிகள் 35 பேருக்கு பதவியுயர்வு | Athavan News
(செ.தேன்மொழி)

மேல் மாகாணத்தில் நேரடியாக இடம்பெற்றுவந்த பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸ் தகவல் மற்றும் ஊடகப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ண தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, போதைப் பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது மேல் மாகாணத்தில் மாத்திரம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு ஊடகங்கள் பெரும் பங்களிப்பை பெற்றுக் கொடுத்து வருவதுடன், அதற்கான நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

போதைப் பொருள் கடத்தல் காரர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வந்தாலும், போதைப் பொருள்களை நாட்டுக்குள் கொண்டுவரும் வழிகள் இன்னமும் மூடப்படவில்லை. அவ்வாறு முடக்கப்பட்டிருந்தால் நாட்டுக்குள் போதைப் பொருட்களின் நடமாற்றம் இருக்காது.

குற்றவாளிகள் எப்போதும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன், அவர்களிடம் தப்பிக் கொள்வதற்காக மாற்று வழிகளை பயன்படுத்துவார்கள். இந்நிலையில் தகவல்களே பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு பெரிதும் அவசியமானதாகும். 

இதேவேளை இவ்வாறான குற்றவாளிகள் மற்றும் பல தரப்பினரிடமிருந்து பொலிஸாருக்கு எப்போதும் அச்சுறுத்தல்கள் ஏற்படும். அச்சறுத்தல்கள் என்பது பொலிஸாரின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டுள்ளதாகும்.

நாட்டு மக்கள் பொலிஸாரின் மீதும், அவர்களின் செயற்பாடுகள் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்போதுதான் குற்றச் செயற்பாடுகளை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியும். ஆரம்ப காலங்களை விட தற்போது போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தல்கள் அதிகரித்துள்ளன. 

இந்த சமூகத்திலிருந்து வரும் நபர்களே பொலிஸ் துறையிலும் செயற்பட்டு வருகின்றனர். இதனால் பொலிஸார் மத்தியிலும் இதுபோன்ற மோசடியாளர்கள் இருக்கலாம். அவர்களை கண்டறிந்து நீக்குவதனுடனே, எமது செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad