கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பில் அனைத்துப் பாடசாலை சமூகத்துக்கும் அறிவுறுத்தும் வகையில் சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளடங்கிய இறுவட்டு ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இந்த இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சுகாதார வழிகாட்டிகளை உள்ளடக்கிய இந்த இறுவட்டு நாடு முழுவதிலுமுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னரும் கல்வி அமைச்சினால் விசேட சுற்று நிருபம் மற்றும் வழிகாட்டல்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் மேற்படி இறுவட்டு பாடசாலைகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக கல்வி அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணை மற்றும் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இறுவட்டு பாடசாலை ஆரம்பமாகும் தினத்தில் சகல பாடசாலைகளுக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment