2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் வாக்களிக்க வந்தார் மஹிந்த தேசப்பிரிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் வாக்களிக்க வந்தார் மஹிந்த தேசப்பிரிய

2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த ...
(நா.தனுஜா)

நான் பலமுறை வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருக்கின்றேன். எனினும் 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இம்முறைத்தேர்தலில் ஓர் வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றிருக்கிறேன். எனக்கு 65 வயதாகினாலும், அது ஒரு பிரச்சினையல்ல. மாறாக வாக்களிப்பு நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவையாகவே இருக்கின்றன. ஆகவே மக்கள் அச்சமின்றி தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இம்முறை நானும் வாக்களித்திருக்கிறேன் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக இன்றைய தினம் நடைபெற்றுக் கொணடிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது நான் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருக்கின்றேன். எனினும் 2011 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு வாக்காளராக வாக்களிப்பு நிலையத்திற்கு இன்றையதினம்தான் சென்றேன். 

ஏனெனில் எனக்கு 65 வயதாகினாலும், வயது ஒரு பிரச்சினையல்ல. வாக்களிப்பு நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவையாகவே இருக்கின்றன. ஆகவே அச்சமின்றி தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியிருந்தது.

அனைத்து இளைஞர்களும் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும். தமது பெற்றோர், சகோதர, சகோதரிகளையும் வாக்களிக்குமாறு வலியுறுத்த வேண்டும். வயது முதிர்ந்தவர்களை வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்து வாருங்கள். 

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்பட்ட, 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு பிரஜையும் 'வாக்களித்தல்' என்ற தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த முடியும். உங்களுடைய வாக்கு என்பது உங்கள் உரிமை, உங்கள் குரல், உங்கள் எதிர்காலம் மற்றும் உங்களுடைய எதிர்காலமாகும். அதனைத் தவறாது பயன்படுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment