அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - காலி பிரதான வீதியில், பெரட் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (22) காலை 8.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் மீது, இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த நபர், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, அம்பலாங்கொடை தலைமையக பொலிஸ் விசாரணை பிரிவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment