புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம் நிறுவப்படும் - பாதுகாப்பு செயலாளர் - News View

Breaking

Post Top Ad

Sunday, August 30, 2020

புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம் நிறுவப்படும் - பாதுகாப்பு செயலாளர்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் தளங்களில் உள்ளடங்கும் புராதன பௌத்த விகாரையான தீக்கவாப்பி ஸ்தூபத்தின் புனர்நிர்மானப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

சத்தாதிஸ்ஸ மன்னனால் நிர்மாணிக்ப்பட்ட தீக்கவாப்பி பெளத்த விகாரை மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் கொண்ட தளம் என்பன கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"இந்த பிரதேசமானது உள்நாட்டு பக்தர்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கான ஒரு புனிதமான தளம் ஆகும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த புனித பிரதேசத்தின் புனரமைப்பு பணிகளுக்கு அரச நிதிகள் எதுவும் செலவிடப்படமாட்டாது என சுட்டிக்காட்டிய பாதுகாப்பு செயலாளர், புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்காக இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழ்கின்ற பௌத்தர்களின் பங்களிப்புடன் நிதி திரட்டப்படும் என குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் தளங்களை அழிவடைவதிலிருந்து பாதுகாக்கும் மற்றும் மறுசீரமைக்கும் ஜனாதிபதி செயலணியின் தலைவரான மேஜர் ஜெனரல் குணரத்ன, அம்பாறையில் உள்ள தீக்கவாப்பி ரஜ மகா விகாரையின் மீள்கட்டுமான பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக அப்பிரதேசத்திற்கு நேற்றையை தினம் விஜயம் மேற்கொண்டார்.

கடந்த காலங்களில் தீக்கவாப்பி ஸ்தூபத்தை புதுப்பிப்பதற்காக பல முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்ட போதிலும் அவை சில காரணங்கள் காரணமாக பாதியளவில் நின்றுபோயின, ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழான அரசாங்கம், புராதன முக்கியக்துவம் வாய்ந்த விகாரையை மூன்று வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னதாக புனரமைப்பு பணிகளை முழுமையாக்கும் என அவர் குறிப்பிட்டார்.

"தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி, பௌத்த பக்தர்கள் வணக்கத்திற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இந்த ஸ்தூபத்தின் மீள்கட்டுமான பணிகளை முடிக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என அவர் தெரிவித்தார்.
இதன் மீள்கட்டுமானப் பணிகளுக்காக படைவீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்களின் ஒத்துழைப்பும் இலங்கை இராணுவ பொறியாளர்களின் நிபுணத்துவமும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

"தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் அறிவு என்பன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்லியல் திணைக்கள நிபுணர்களால் வழங்கப்படவுள்ளமையினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய தொல்லியல் தளங்களில் ஒன்றான தீக்கவாப்பி ஸ்தூபத்தின் புனரமைப்பை ஆரம்பிக்க முடியும்" அவர் குறிப்பிட்டார்.

அனுராதபுர நகரில் உள்ள றுவன்வெலி மகா சேய ஸ்தூபத்தின் அமைப்பினை ஒத்த தோற்றத்தை வழங்கும் வகையில் தீக்கவாப்பி ஸ்தூபம் புதுப்பிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

"இதற்கான நிதியும் நிறுவப்பட்டதுடன் அதற்கு பொதுமக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் தீக்கவாப்பி ரஜ மகா விஹாரையின் நாயக்க தேரோ வண. மகாவெவ சோபித தேரர், அரந்தலா சர்வதேச பெளத்த மையம்த்தின் வண. கிரிந்திவெல சோமரத்தின தேரோ, பெளத்த மத தொலைக்காட்சி சேவைப் பணிப்பாளர் மற்றும் கொழும்பு ஸ்ரீ சம்போதி விஹாரயின் நாயக்க தேரர் வண. பொரலந்த வஜிரஞான தேரோ மற்றும் மடிகொட்டுவ புராண பெளத்த விகாரையின் ராஜகீய பண்டித் வண. யட்டிஹான விமல புத்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினருடன் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் திலக் ராஜபக்ஷ, கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி சித்ராணி குணரத்த, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி சுஜீவா நெல்சன், கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீசி. கமகே, 24வது பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரீடீ வீரகோன், சிவில் பாதுகாப்பு படையின் பிரதி பணிப்பாளர் ரியர் அட்மிரல் யூ ஆர் சேரசிங்க, கிழக்கு கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் யுஎஸ்ஆர். பெரேரா, தென்கிழக்கு கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் சீ விஜயசூரிய, தொல்பொருளியல் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க ஆகியோரை உள்ளடக்கிய உயர்மட்டக்குழு கலந்துரையாடலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad