வாக்காளர்களாகிய நாம் கடந்த காலத்தை மதிப்பீடு செய்து எதிர்காலத்திற்காக கற்றறிந்த முறையில் நமது கவனத்தை செலுத்த வேண்டும் - நவாஸ் முஸ்தபா - News View

About Us

About Us

Breaking

Saturday, August 1, 2020

வாக்காளர்களாகிய நாம் கடந்த காலத்தை மதிப்பீடு செய்து எதிர்காலத்திற்காக கற்றறிந்த முறையில் நமது கவனத்தை செலுத்த வேண்டும் - நவாஸ் முஸ்தபா

ஜனாதிபதியின் பக்கம் தாவினார் நவாஸ் ...
(சில்மியா யூசுப்)

தற்போது நாம் ஒரு முக்கியமான தேர்தலின் மத்தியில் இருக்கின்றோம். ஆகவே வாக்காளர்களாகிய நாம் கடந்த காலத்தை மதிப்பீடு செய்து எதிர்காலத்திற்காக கற்றறிந்த முறையில் நமது கவனத்தை செலுத்த வேண்டும். எமது முடிவு தேசத்திற்கு நலன் பயப்பதாக இருக்க வேண்டும். எனவே, இது குறித்த ஒரு பகுப்பாய்வை முன்வைப்பது முஸ்லிம் தலைமைகள் என்ற முறையில் எங்கள் பொறுப்பு என்று உணர்ந்தோம், எனவே இப் பகுப்பாய்வானது வரவிருக்கும் பொதுத் தேர்தலில் உங்களுக்கு சிறந்த முடிவை எடுக்க உதவும் என முன்னாள் நிதியமைச்சர் எம்.எம். முஸ்தபாவின் மகனான கணக்காளர் நவாஸ் முஸ்தபா குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில் சுதந்திரத்தின் ஆரம்ப நாட்களில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்ததற்கான முக்கிய காரணம், அக்கட்சியின் வணிக நட்பு கொள்கைகள் முக்கிய முஸ்லிம் வணிகர்களுக்கு பயனளிப்பதாகக் கண்டமையால் ஆகும். அத்தகைய பெரிய அளவிலான வணிகங்கள் அந்தக் காலகட்டத்தில் நீடு நிலைக்கப்படவில்லை. மேலும் இப்போது அந்த வணிகங்கள் இங்கு இல்லை. பல ஆண்டுகளாக, இந்த வாக்களிக்கும் முறை முஸ்லிம்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. இது பகுத்தறிவு சார்ந்த நடத்தையொன்றல்ல. இப்போது பெரிய அளவில் முஸ்லிம் வணிகங்கள் சிறு தொழில்களாகவே காணப்படுகிறது. ஒரு தரப்பினருக்கு நமது மறுக்க முடியாத விசுவாசத்தை கொடுப்பது குறித்து நம் சமூகம் மறு பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.

முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக மற்ற சமூகங்களுடன் சமாதானமான முறையில் வாழ்ந்து வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, சமூகத்தின் சிலரின் செயல்கள் சமீபத்திய காலங்களில் அந்த அமைதியைக் குலைத்துச் சென்றுள்ளன. குறிப்பாக சில அரசியல்வாதிகள் சில உண்மைகளை திசை திருப்புவதன் மூலம் பழியை ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு மாற்ற முயற்சிக்கின்றன. குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைக் குறிப்பிடலாம். உண்மைத் தன்மையைத் தீர்மானிக்க இந்த தவறான பிரச்சாரங்களை நாம் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

ராஜபக்கஷ நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைகளைப் பார்க்கும்போது, அவர்கள் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை கண்டுகொள்ள முடிகின்றது. எவ்வாறாயினும், முஸ்லீம் உலகின் சாத்தியக்கூறுகள், குறிப்பாக அரபு நாடுகள் முழுமையாக நல்லுறவை பேணவில்லை, அதேசமயம் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே ஏராளமான முஸ்லிம் நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டார் மற்றும் அவர்கள் அனைவருடனும் சாதகமான தொடர்புகளையும் ஏற்படுத்தினார். திருமதி பண்டாரநாயக்க அவர்களைத் தவிர வேறு எந்தத் தலைவர்களும் இந்த மரியாதையை செலுத்தவில்லை. பொருளாதார வளர்ச்சிக்காக எமக்கு ஒரு பெரிய வெளிப்புற ஆதரவு தேவைப்படுகிறது. முஸ்லீம் உலகத்துடனான தொடர்புகளை திறம்பட பயன்படுத்துவது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சிறந்த நேர்மறையான ஆற்றலை வழங்கும்.

மேலும், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் எட்டு மாத காலப்பகுதியில், அவர் சமூகங்களிடையே நல்லிணக்கத்துடன் நாட்டை சரியான திசையில் கொண்டு சென்றுள்ளார் என்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம் என்றார்.

அதேபோன்று தற்போது நமது நாட்டிற்கு தேவைப்படுவது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு வலுவான அரசாங்கமொன்றாகும். பொருளாதார வளர்ச்சி சமூகங்களிடையே அதிக நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும். போருக்குப் பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நாம் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுகொண்டோம். அதேபோல் நிலையற்ற அரசாங்கத்தின் போது வளர்ச்சியின் பின்னடைவையும் நாங்கள் கண்டோம் கடந்த பலவீனமான அரசாங்கத்தின் போது ஒற்றுமையின்மை தோன்றியதையும் எம்மால் அடையாளம் காண முடிகின்றது.

இவ் ஆய்வின் இருதியாக, எமது நாட்டின் பொருளாதார செழிப்புக்கு ஒரு வலுவான அரசாங்கத்தையும் ஒரு இணக்கமான தேசத்தையும் தேர்ந்தெடுப்பதில் புத்திசாலித்தனமான முடிவை எடுக்குமாறு எம் சமூகத்தினருக்கு அறிவுறுத்துகின்றோம். என முன்னாள் நிதியமைச்சர் எம்.எம். முஸ்தபாவின் மகனான கணக்காளர் நவாஸ் முஸ்தபா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment