அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை : திடீர் பல்டி அடித்தார் டிரம்ப் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 1, 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை : திடீர் பல்டி அடித்தார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க விரும்பவில்லை எனக்கூறி ஜனாதிபதி டிரம்ப் திடீர் பல்டி அடித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பேரிடருக்கு மத்தியில் வருகின்ற நவம்பர் 3ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

கொரோனோ வைரஸ் பாதிப்பு ஒருபுறமிருந்தாலும் ஜனாதிபதி டிரம்பும், ஜோ பிடனும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரசை கையாண்ட விதம், அதனால் ஏற்பட்ட வேலையிழப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி, எதிர்கட்சி பிரசாரம் செய்து வருவதால் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் டிரம்ப் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றால் மோசடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எனவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் நேற்றுமுன்தினம் டிரம்ப் கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “தபால் மூலம் ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றால் 2020ம் ஆண்டு தேர்தல், வரலாற்றில் மிகவும் தவறான மற்றும் மோசடியான தேர்தலாக இருக்கும். மேலும் இது அமெரிக்காவுக்கு பெரும் சங்கடமாக இருக்கும். எனவே மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும், வாக்களிக்கும் வரை தேர்தலை தாமதப்படுத்த வேண்டும்“ என குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க சட்டத்தின்படி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்ற போதிலும் டிரம்பின் இந்த திடீர் நிலைப்பாடு அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பியது. எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் டிரம்பின் யோசனையை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் ஒரே நாளில் டிரம்ப் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கினார். ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க தான் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, தேர்தலை ஒத்திவைக்கக்கோரி டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவு குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர் பதில் கூறியதாவது நான் தாமதிக்க விரும்பவில்லை தேர்தலை நடத்த விரும்புகிறேன். அதேசமயம் தேர்தல் முடிவுகளுக்காக 3 மாதங்கள் வரை காத்திருக்க விரும்பவில்லை.

தபால் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கையையும், தேர்தல் முடிவுகளையும் தாமதப்படுத்தும். இது நம் நாட்டுக்கு மிகவும் நியாயமற்றது.

நாம் இதை செய்தால் உலக நாடுகள் நம்மை பார்த்து சிரிக்கும். ஏனென்றால் இது வேலை செய்யாது என்பது அனைவருக்கும் தெரியும். தபால் வாக்குப் பதிவு பற்றிய செய்தியை தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் படியுங்கள். இது ஒரு பேரழிவு.

அவர்களிடம் இருந்து வெளிப்படையாக வந்த அந்த செய்தியை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். அந்த செய்தி ஒரு பேரழிவை பற்றியது. 

ஜனாதிபதித் தேர்தல் திகதியில் மாற்றத்தை நான் காண விரும்புகிறேனா என்றால் நிச்சயமாக இல்லை. அதே சமயம் நான் ஒரு வக்கிரமான தேர்தலை காண விரும்பவில்லை. அது நடந்தால் இந்த தேர்தல் வரலாற்றில் மிகவும் மோசமான தேர்தலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment