ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Saturday, August 22, 2020

ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் தயாசிறி ஜயசேகர

குளியாப்பிட்டிய சம்பவம் தொடர்பில் ...
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற வேலைத்திட்டம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இது அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டுவரப்பட்டதல்ல என இராஜாஙக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கை அடிப்படைவாதக் கொள்கையை அடிப்படையாக் கொண்டு கொண்டுவரப்பட்டதல்ல. நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போதும் எமது கட்சியைச் சேர்ந்த 11 பேர் இந்த பிரேரணையை கொண்டு வந்திருந்தனர். இது தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு சந்தேகங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அச்சப்படக்கூடிய எந்த விடயமும் இதில் இல்லை.

அத்துடன் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற சட்டத்தின் கீழ் நாட்டில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கிலே இதனை நாங்கள் கொண்டுவந்தோம். இது தொடர்பில் எதிர்கால திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவது எமது பாராளுமன்றத்துக்கு இருக்கும் கடப்பாடாகும். அதனால் இந்த சட்டம் இனவாதமாக மாறும் என யாரும் சிந்திக்க வேண்டாம்.

குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் அந்த கட்சிகள் இந்த சட்டம் தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை. அவ்வாறான எதுவும் இடம்பெறப் பாேவதில்லை. அத்துடன் ஜனாதிபதி அக்கிராசனத்தில் வைத்து தெரிவித்த விடயங்களை நடைமுறையில் கொண்டு வர நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment