7 லட்சத்தை தாண்டிய கொரோனா பலி - திணறும் உலக நாடுகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

7 லட்சத்தை தாண்டிய கொரோனா பலி - திணறும் உலக நாடுகள்

What is going to happen if corona spread is bad? - Popular medical ...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 86 லட்சத்து 90 ஆயிரத்து 433 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 60 லட்சத்து 79 ஆயிரத்து 792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 436 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 3 ஆயிரத்து 332 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 1,60,273
பிரேசில் - 96,096
மெக்சிகோ - 48,012
இங்கிலாந்து - 46,299
இந்தியா - 38,938 
இத்தாலி - 35,171
பிரான்ஸ் - 30,296
ஸ்பெயின் - 28,498
பெரு - 20,007

No comments:

Post a Comment